தலிபானுக்கும் உலகுக்குமிடையிலான பாலமாக கத்தர்!

காபூல்(14/09/2021): தலிபானுக்கும் உலகத்துக்கும் இடையிலான பாலமாக கத்தர் செயல்படும் என தலிபான் கலாச்சாரக்குழு உறுப்பினர் சயீது கூறியுள்ளார்.

கத்தர் வெளியுறவுதுறை அமைச்சர் முஹம்மது பின் அப்துல் ரஹ்மான் அல்தானி கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று ஆப்கானிஸ்தான் வந்து பிரதமர் முல்லா முஹம்மது ஹஸன் உட்பட தலிபான் தலைவர்களுடன் சந்திப்பு நடத்தியிருந்தார். முன்னாள் பிரதமர் ஹமீத் கர்ஸாயி மற்றும் தேசிய மறு சீரமைப்பு தலைமை குழு தலைவர் அப்துல்லாஹ்வுடனும் தனித்தனியாக சந்திப்பு நடத்தியிருந்தார்.

உலக நாடுகளுடன் தலிபான்களின் உறவை மேம்படுத்துதல், பிற நாடுகளுக்கு எதிராக ஆப்கான் பிரதேசத்தை யாரும் பயன்படுத்துவதைத் தடுத்தல், தலிபான் அரசில் ஆப்கான் அரசியல்வாதிகளை உட்படுத்துதல் முதலான மூன்று நோக்கங்களை மையமாக வைத்து கத்தர் வெளியுறவு துறை அமைச்சர் அல் தானி ஆப்கான் வருகை தந்ததாகவும் அது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்ததாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஹாட் நியூஸ்: