இத்தாலியில் மருத்துவம் பயின்று வந்த தமிழக மாணவர், தற்கொலை!

ரோம்  (22 ஆக. 2020): நீலகிரி மாவட்டம், கீழ்க்கோத்தகிரி பகுதியைச் சேர்ந்தவர் சதானந்த். ஒரு தேயிலை விவசாயி. இவருடைய இரண்டாவது மகன் பிரதிக்ஷ் வயத 21! இத்தாலியிலுள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மருத்துவம் பயின்று வந்துள்ளார். இவருடைய சகோதரரும் இத்தாலியிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கெமிக்கல் இன்ஜினீயராகப் பணியாற்றி வருகிறார். சகோதரர் வசிக்கும் பகுதிக்கும், இவரது அறைக்கும் நீண்ட தொலைவு என்பதால் பிரதிக்ஷ் கல்லூரி அருகில் தனி அறை எடுத்துத் தங்கி, படித்துவந்தார்.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு இத்தாலியில் அதிகரிக்கவே, கல்லூரியிலிருந்து அனைத்து நண்பர்களும் சொந்த ஊருக்குச் சென்று விட்டனர். ஆனால், பிரதிக்ஷ் மட்டுமே இந்தியாவைச் சேர்ந்தவர் என்பதால், அறையில் தனிமையில் இருந்துள்ளார்.

Neelagiri-Medical-Student
Neelagiri-Medical-Student

கடந்த 10-ம் தேதி தன் அப்பாவுடன் வீடியோ காலில் பேசிய அவர், தனக்கு மன அழுத்தம் அதிகமிருப்பதாகக் கூறியுள்ளார. அவரின் தந்தையும், இந்தியா வந்து விடுமாறு அறிவுறுத்தியிருக்கின்னறார். 13-ஆம் தேதி இந்தியா வருவதாகக் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்திருக்கிறார். ஆனால், அடுத்த சில நிமிடங்களில், தனது சகோதாரர் வீட்டின் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகின்றது.

இத்தாலியில் மருத்துவம் பயின்றுவந்த நீலகிரி மாவட்ட மாணவர், மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஹாட் நியூஸ்:

ஐபிஎல் போட்டியில் சென்னை வெற்றிபெற பாஜகவே காரணம் – புழுதியை கிளப்பும் அண்ணாமலை!

சென்னை (30 மே 2023): ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமே பாஜக தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...

உயிர் நண்பனின் இறுதிச் சடங்கில் தீயில் குதித்து நண்பர் தற்கொலை!

லக்னோ(28 மே 2023): புற்றுநோயால் உயிரிழந்த தனது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 40 வயதுடைய நபர் ஒருவர் தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது....

பாடதிட்டங்களில் உள்ள நச்சுக் கருத்துகள் அகற்றப்படும் – கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்!

பெங்களூரு (30 மே 2023): கர்நாடகாவின் நல்லிணக்கம் மற்றும் மதச்சார்பற்ற பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை, வெறுப்பு அரசியலை பொறுத்துக்கொள்ள முடியாது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். தனது இல்ல அலுவலகமான...