ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு!

Share this News:

டோக்கியோ (20 மார்ச் 2021): ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டள்ளது. மேலும் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் மியாகி மண்டலத்திற்கு அருகே உள்ளூர் நேரப்படி மாலை 6 மணி 9 நிமிடத்துக்கு 6.9 என்கிற அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலப்பகுதியை ஒட்டிப் பசிபிக் பெருங்கடலின் கீழ் 73 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜெர்மனியைச் சேர்ந்த புவியியல் ஆய்வுத்துறை முதல் தகவலாக தெரிவித்தது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் இருந்து 50 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இஷினோமகி, 57 கி.மீ தூரத்தில் உள்ள யமோட்டோ , 68 கி.மீ தூரத்தில் உள்ள ஒஃபுனாடோ , 75 கி.மீ தூரத்தில் உள்ள ஷியோகாமா, 80 கி.மீ தூரத்தில் உள்ள ஃபுருகாவா, 81 கி.மீ தூரத்தில் உள்ள இச்சினோசெக்கி , 90 கி.மீ தூரத்தில் உள்ள செண்டாய், 98 கி.மீ தூரத்தில் உள்ள மிசுசாவா ஆகிய பகுதிகளில் பூமி அதிர்ச்சி உணரப்பட்டிருக்கிறது.


Share this News:

Leave a Reply