ட்விட்டர் தலைமை நிர்வாகி திடீர் விலகல்!

நியூயார்க் (29 நவ 2021): ட்விட்டர் தலைமை நிர்வாகி ஜேக் டோர்சி தனது பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்டுள்ள ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக (சிஇஓ) பதவி வகித்தவர் ஜேக் டோர்சி. 45 வயதான டோர்சி, அவரது டிஜிட்டல் பேமெண்ட்ஸ் நிறுவனமான ஸ்கொயர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றுகிறார்.

இந்நிலையில், ட்விட்டர் தலைமை பொறுப்பில் இருந்து ஜேக் டோர்சி பதவி விலக உள்ளதாகவும், டோர்சி மற்றும் டுவிட்டர் நிர்வாகக்குழு அடுத்த சிஇஓ குறித்து முடிவு செய்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், இந்த தகவல் குறித்து ட்விட்டர் தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை.

அதேவேளை ட்விட்டர் சிஇஓ பொறுப்பில் இருந்து விலகுவதாக ஜேக் டோர்சி இன்று அறிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில், விரிவான கடிதத்தையும் பதிவு செய்துள்ளார்.

ஹாட் நியூஸ்: