கொரோனா பாதிப்பால் அமெரிக்காவில் ஒருவர் பலி!

வாஷிங்டன் (01 மார்ச் 2020): அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் ஹூபெய் மாகாணத்தின் வூஹான் நகரில் இருந்து கொரோனா வைரஸ் பரவ துவங்கியது. இந்த வைரஸ், அண்டார்டிகா தவிர மற்ற அனைத்து கண்டங்களுக்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு சீனாவில், நேற்று வரை 2,835 பேர் உயிரிழந்துள்ளனர். 79,251 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனா மட்டுமல்லாமல் பல நாடுகளில் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. ஈரானையும் இந்த வைரஸ் அதிக அளவில் தாக்கியுள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் அமெரிக்காவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வாஷிங்டன் மாகாணத்தை சேர்ந்த 50 வயது பெண் ஒருவர், வைரஸ் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இன்று அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை அதிபர் டிரம்ப்பும் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஹாட் நியூஸ்:

காலியாகும் பாஜக கூடாரம் – தனிமையில் அண்ணாமலை!

சென்னை (24 மார்ச் 2023): அண்ணாமலை தலைமை மீதான அதிருப்தியில் பாஜகவில் இருந்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் அதிமுகவில் இணைந்தனர். ஏற்கனவே 13 நிர்வாகிகள் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த பிறகு, செங்கல்பட்டு...

ராமர் இந்துக்களின் கடவுள் அல்ல – முன்னாள் முதல்வர் பரபரப்பு கருத்து!

ஜம்மு (24 மார்ச் 2023): ராமர் இந்துக்களின் கடவுள் அல்ல என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய காங்கிரஸ் தலைவருமான டாக்டர். பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். மேலும் ஆட்சியில் நீடிக்கவே ராமரின் பெயரை...

கத்தார் தோஹாவில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து!

தோஹா (23 மார்ச் 2023): கத்தார் தோஹா அல் மன்சூராவில் ஒரு குடியிருப்பு கட்டிடம் பகுதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று காலை 8.18 மணியளவில் மன்சூரா பி ரிங் சாலையில்...